;
Athirady Tamil News

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்காக நடமாடும் சேவை..!!

0

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்காக தற்காலிக பொலிஸ் நிலையத்தினூடாக நடமாடும் பல் வைத்திய சேவை இடம்பெற்றது.

நாடு பூராகவும் மக்களுக்கு காணப்படும் குறைகளை இனம்கண்டு அவர்களுக்கு சேவை செய்யும் முகமாக ஒரு மாதகாலத்திற்கு அமைக்கப்பட்ட நாவிதன்வெளி உப பொலிஸ் நிலையத்தின் ஊடாக குறித்த சேவையானது நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இந்த சேவை நாவிதன்வெளி 15 ஆம் கிராம விவேகானந்தா மகா வித்தியாலயத்தியாலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இச் சேவை உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.மேனணின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவையாளரின் வழிகாடட்டுதலின் பேரில் நடமாடும் பல்வைத்திய சேவை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + fourteen =

*