வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா..!! (படங்கள்)
வவுனியா சதுரங்க சம்மேளனத்தினால் கடந்த மாதம் நடாத்தப்பட்ட திறந்த சதுரங்க சுற்று போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நெல்லி ஸ்டார் ஹொட்டலில் வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார் வவுனியா IDM கணனி கல்வி நிலையத்தின் நிர்வாகி ச.தனுஷ்காந்த் மற்றும் ஜீவிதா புகைபடக் கலையகத்தின் இயக்குனர் ப.பிரதாப் உமா பல்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஆ. அம்பிகைபாகன் டைடன் விளையாட்டு உபகரண நிறுவன உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா