;
Athirady Tamil News

உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட குருநகர் படுகொலை நினைவேந்தல்..!! (வீடியோ &படங்கள்)

0

யாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் மீனவர்களின் 32ஆவது ஆண்டு நினைவுதினம், இன்று (ஞாயிற்றுக்கிக்கிழமை) காலை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குருநகர் சனசமூக நிலைய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய உறவினர்கள், மலர் தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது.

நினைவேநதல் நிகழ்வில், யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி குருநகர் துறையிலிருந்து 31 மீனவர்களுடன் சென்ற ‘தூயஒளி’ படகு, முகத்துவாரத்தை அடைந்தபோது படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

நடுக்கடலில் தப்பிக்க வழியின்றி நின்ற மீனவர்கள் 31 பேரும் வெட்டியும் அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர். படையினரின் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடிய அக்காலகட்டத்தில் அரங்கேற்றப்பட்ட மிகவும் கொடூரமான செயலாக வரலாற்றில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு பல சர்வதேச அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டதோடு, தசாப்தங்கள் கடந்தும் இப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லையென உறவினர்கள் அங்கலாய்க்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 3 =

*