;
Athirady Tamil News

யாழில் வாள் வெட்டுத் தாக்குலை மேற்கொண்டு தப்பியோடிய இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு..!! (படங்கள்)

0

கொக்குவில் மேற்குப் பகுதியில் உள்ள காந்தி சன சமூக வீதியில் நேற்றைய தினம் வாள் வெட்டுத் தாக்குலை மேற்கொண்டு தப்பியோட முற்பட்டவர்களை கிராம இளைஞர்கள் இணைந்து மடக்கிப் பிடித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்குப் பகுதியில் நேற்று 11 மணியளவில் 4 மோட்டார் சைக்கிளில் பயணித்த வாள்வெட்டிக் குழுவினர் அப் பகுதியில் உள்ள ஓர் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதன்போது தாக்குதலிற்குள் அகப்பட்ட இளைஞன் எழுப்பிய குரலையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி தாக்குதல்தாரிகள் பயணித்த ஓர் மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர்.

இதன்போது அகப்பபட்டவர் 22 வயது மதிக்கத்தக்க ஆனைக்கோட்டைப் பகுதியை சேர்ந்தவராவார். இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் உடன்னியாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அறிவிக்கம்பட்ட நிலையில் 45 நிமிடங்கிளன் பிற்பாடு அப்பகுதிக்கு பொலிசார் வருகை தந்தபோதும் தலையில் காயப்பட்ட இளைஞனும் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவரும் சம்பவ இடத்திலேயே கானப்பட்டனர்.

இதன்போது வருகை தந்த பொலிசாரில் ஒருவர் சம்பவ இடத்தில் குழுமி நின்றவர்களை வீடியோ புகைப்படம் எடுத்ததோடு இரண்டாம் பொலிசார் காயமடைந்தவரிடம் விபரங்களை கேட்டறிந்த சமயம் மற்றுமொரு பொலிசார் தாக்குதல்தாரியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றார்.

குறித்த சம்பவத்தினையடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 12 =

*