;
Athirady Tamil News

நெடுந்தீவு பிரதேசசபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்..!!

0

நெடுந்தீவு பிரதேசசபையின் உப தவிசாளர் சண்முகம் லோகேஸ்வரன் சுகயீனம் காரணமாக காலமாகிய நிலையில், அவரது வெற்றிடத்திற்கு அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெடுந்தீவு மேற்கு தேர்தல் வட்டாரம் மூன்றில் விகிதாசாரப் பட்டியலில் போட்டியிட்ட சமூக சேவையாளரான இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் நேற்றையதினம் 10.06.2018 அன்று கட்சியால் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவரது சத்தியப்பிரமாண நிகழ்வும் பதவிப்பிரமாண நிகழ்வும் யாழ் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரியாலயத்தில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், கட்சியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுபபினர் என். விந்தன் கனகரட்ணம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*