;
Athirady Tamil News

உயர்மட்டச் சாலை திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி – முதலமைச்சர் தகவல்..!! (வீடியோ)

0

சென்னை தரமணியில் இருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் படிப்படியாக எல்லாப் பகுதிகளிலும் செய்யப்படும் என அவர் கூறினார். சாலை போக்குவரத்து தொடர்பாக 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசின் கோரிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதுவும் பரிசீலனையில் உள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 20 =

*