;
Athirady Tamil News

சிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்கள்.. காரணமென்ன? (முழுமையான விபரங்கள், படங்கள், வீடியோவுடன்)

0

நாதியற்ற நிலையில் இன்று…

போரின் வடுக்களோடு வக்கற்றநிலையில் கையேந்தும் திரிசங்கு நிலையில்ஈழத்தமிழினம் ..

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் 2009 காலப்பகுதியில் போரின் உக்கிரத்தை அறிந்தும் கிளிநொச்சியில் இருந்து .. முள்ளிவாய்க்கால் ,நந்திக்கடல்என சாவின்விளிம்புவரைவந்த பொதுமக்களும் , உயிரைக் கொடுக்கத் துணிந்து நின்ற போராளிகளும் , கடைசி நேரத்திலும் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட போராளிகளும் ,குடும்பஸ்தர்களான துணைப்படையினரும் .. அங்கவீனர்களாகவும் போரின் கோரவடுவை உடலிலும் உள்ளத்திலும் தாங்கி தீண்டத்தகாத இனமாக இன்று பிச்சை எடுத்தேனும் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்க , மறுபுறம் கற்பு நெறியுடன்கூடிய பண்பாடுமிகு வீரத்தமிழிச்சிகள் விலைமாதர்களாகியேனும் தம் பிள்ளைகளுக்கு ஒருவேளை கஞ்சியாவது ஊற்றுவோம் எனும் துர்ப்பாக்கிய நிலையில் சிந்திக்க விட்டது யார் குற்றம் ?

நிர்க்கதியாக நட்டநடு வீதியில் நீங்கள் வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன ?. யாருக்கு என்ன நஷ்டம் ? என்று எதையும் பொருட்படுத்தாது இறுமாப்பொடு கண்டுகொள்ளாது உலகம் முழுவதும் எண்ணுக்கணக்கற்ற இலட்சம் கோடி ரூபாய்களை கையகப்படுத்திக் கொண்ட விடுதலைப் பினாமிகள் தம் ஏழேழு பரம்பரைக்கு சேர்த்த சொத்தாகிப் போயுள்ளதை யாரறிவார்!

தாயக மக்களையும், விடுதலைப் போரின் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தையும் மூச்சாக சுத்தியோடு நேசித்த பல இலட்சம் புலத்து தமிழர்களின் உழைப்பையும் ,கண்ணீரையும் இரத்தத்தையும் சுரண்டிச் சேர்த்து ஏப்பம் விட்டவர் ஏதேனும் பதில் சொல்வார்களா ?

விடுதலைப் போராட்டத்தில் தேய்ந்த பாட்டா சிலிப்பரோடு (பாதணி) ஒரு லுங்கி, ஒருசீருடை செட், கையில் ஏ.கே.47 இவற்றோடு மட்டும் எந்த சொத்தும் இல்லாமல் களத்தில் சாகத்துணிந்து நின்ற போராளிகள் எனக்கூறும் சிலர் புலத்தில் இன்று தப்பி வந்து வாழும்போது, இவர்கள் கைகளுக்கு மிகச் சொற்ப்ப காலத்தில் இலட்சக் கணக்கில் ஈரோக்களாகவும், சுவிஸ் பிராங்குகளாகவும், பவுண்ஸ்களாகவும், டாலர்களாகவும் கைக்கு வந்து பண முதலைகளாக ஊதிப் பெருத்து எங்கு முதலிடலாம் என தமிழர்களிடமே வாய்விட்டுக் கேட்கும் நிலையுண்டென்று யாரறிவார் ?

புலத்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் ,சாதாரணமாக நேர்மையாக உழைக்கும், பாசை ஓரளவு பேசக்கூடிய ஓர்சராசரித் தமிழன் நாளொன்றிற்கு மூன்று வேலை செய்தும் குடும்ப பொருளாதாரச் சுமையை தாங்காது பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் சமகால யதார்த்த நிலையிருக்க தம்மைப் புலம்பெயர் தாயக விடுதலைப் பணியாளர்களாக ,தியாக மனப்பாங்குடன் குடும்ப இன்ப துன்பங்களைக்கூட மறந்து மக்கள் பணிக்காக எம்மை இணைத்தோம் எனுப் பீத்திக்கொள்ளும் செயற்பாட்டாளர்கள்

அதிலும் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் சேர்த்த பணத்தில் மாதாந்த அடிப்படைப் சம்பளமாக குறைந்த ஊதியம் பெற்றவர்களின் கைகளில் இன்று சொத்தாக பல அடுக்குமாடி வீடுகளும்,  உணவு விடுதிகளும், எரிபொருள் நிரப்பு நிலையங்களும், இன்னும்பல பெரும் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும் இவர்தம் கையில் வந்தது எப்படி ..?

இன்றேனும் இதைப்பற்றிக் கேள்விகேட்க யாருக்கும் நாதியுண்டா..? இல்லை எவருக்கும் திராணியுண்டா ..?

இல்லாத பட்சத்தில் ,இதுபோல் பல காட்சிகள் அரங்கேறியே தீரும்..!

சுவிஸிலிருந்து .. சுமா(Suma)

ஓர் பயனாளியின் முகநூலில் இருந்து..

…………………………………………………

சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் மக்கள்# கண்ணீரோடு வழியனுப்ப காரணம் என்ன??….

#போரால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வளியற்று இருந்த 3500 வடமாகாண மக்களிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.

இதன் மூலம் இன்றுவரை வடமாகாணத்துக்குள் மாதாந்தம் அண்ணளவாக 112 000 000/= ரூபாய்கள் புரள்கின்றன.

#போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிளந்து, காலிளந்து, உடல் முழுதும் சன்னங்கள் நிறைந்து வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோர்கும் வேலை கொடுத்த மகான் இவர்.

#வலயக்கல்வி பணிமனையின்கீழ் மாதாந்தம் 3000/= வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளீர்து 30,000/= மேல் வேதனம் பெற வைத்தார். அத்துடன் முன்பள்ளிகளின் கல்வி, கட்டடம், தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார்.

# கல்வி நிலையங்கள் ஆரம்பித்து தரம் 1 முதல் 11 வரை பலநூறூ மாணவர்கள் கற்க வழிசமைத்தார்.

#பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவாயம், கைப்பணி, தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும்பல துறைகளில் நெறிப்படுத்தினார்.

#இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து; நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார்.

# போரால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட பாடசாலைகள்,கோவில்கள்,பல பொது இடங்களை துப்பரவு செய்து தந்தார்.

#கோவிலே கட்டுவித்து விக்கிரகங்கள் பல செய்து கும்பாவிசேகமே செய்வித்தார்.

#எம் பகுதியில் குளம்கூட கட்டுவிக்க துணை நின்றார்.

#திணைக்களத்தினுள்ளே நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசை அணி என உருவாக்கி சாதனைகள் பல நாம் பெற வழிசெய்தார்.

#திறனுள்ளவர்கள் பலநூறு பேரை உயர்கல்விக்குத் தானனுப்பி பல துறைகளில் Diploma, Degree பெற செய்து அழகு பார்த்தார்.

# வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார்.

# திணைக்களத்திற்கு அப்பால், பல பொதுமக்கள், பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.

# வேலை வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது, பணியாளர்களை படிப்படியாகி தரமுயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பொற்றுக் கொடுத்தார்.

# ஆரம்பத்தில் ஒரு தமிழர் தன்னும் CSD இல் இணைய முன்வராத சந்தர்பத்திலும்; தான் துவண்டு விடாது கடினப்பட்டு ஆரம்பத்தில் 20 பணியாளர்களை இணைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று தன் தலையை அடகுவைத்து, மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டி 3500 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக் கொண்டார், இவரின் சேவைகள் ஒன்றா இரண்டா சொல்லிட முடியவில்லை……

# அரசியல் நெருக்கடிகள்,நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.

# பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து; உதவிகள் பல செய்து தாயாய், தந்தையாய், அண்ணனாய், நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.

நாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும், எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை “அன்போடு அரவனைத்த உள்ளம்” பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது??..

விஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..!! (படங்கள்)

இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ)

இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ)

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 19 =

*