;
Athirady Tamil News

வரணி JCP தேர் இழுத்த விவகாரம்: மனஉளைச்சலால் உபயகார பெண்மணி மரணம்..!! (படங்கள் இணைப்பு)

0

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அளவற்ற பக்தியுடைய 80 வயது மூதாட்டியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அண்மையில் இந்த ஆலயத்தில் ஜேசிபி இயந்திரத்தை பாவித்து தேர் இழுத்தமையால் ஏற்பட்ட மனஉளைச்சலே இவரது மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆலயப்பகுதியை பிறப்பிடமாக கொண்ட இந்த மூதாட்டி அண்மைக்காலமாக பிள்ளைகளுடன் யாழ் நகரத்தில் தங்கியிருந்தார். பரம்பரை பரம்பரையாக மூதாட்டியின் குடும்பத்திற்கும் தேர் திருவிழாவில் பங்குண்டு. இம்முறையும் தேர் திருவிழாவிற்காக ஊருக்கு வந்து, தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.

சாதி விவகாரத்தால் ஜேசிபி மூலம் தேர் இழுக்கப்படுவதை கண்டதும், கடும் அதிருப்தியடைந்து அந்த இடத்திலேயே எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார். எனினும், சாதிமான்கள் அவரது எதிர்ப்பை கணக்கிலெடுக்கவில்லை.

இதனால் கடந்த மூன்று நாட்களாக பெரும் மனஉளைச்சலிற்கு உள்ளாகியிருந்தார். நேற்று முன்தினம் மாலை உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். வாகனம் மூலம் வரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது, வழியில் மரணமாகியுள்ளார்.

உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு சடலம் கொண்டு வரப்பட்டதால் மரண விசாரணைக்காக சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு, நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

யாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 9 =

*