;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 100 வயது மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்: கழுத்து உடைந்து பலியான சோகம்..!!

0

பிரித்தானியாவில் 100 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து பையை வழிப்பறித்து சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Derby பகுதியில் கடந்த மே மாதம் 28-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 08.05 மணியளவில் Sofija Kaczan என்ற 100 வயது மூதாட்டியை பின் தொடர்ந்த திருடன் அவரை தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பையை திருடிவிட்டு சென்றுள்ளான்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மூதாட்டி Royal Derby மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில் அவர் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.படுகாயமடைந்த அவரின் கழுத்து உடைந்திருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், மூதாட்டியிடம் திருடிய பையை அந்த நபர் திருடிய இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தள்ளி சென்று போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

அதன் பின் அங்கிருந்த பொதுமக்களின் உதவியின் மூலம் அவனை பிடித்துள்ளோம். அவனின் பெயர் Arthur Waszkiewicz எனவும் 39 வயதான இவன் Derby-யைச் சேர்ந்தவன் எனவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 18 =

*