மாங்குளம் முல்லை வீதியில் வீதியை குறுக்கறுத்த மரைக்கூட்டம்: தடம்பிரண்டது சொகுசு கார்..!! (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியின் 9 ம் கட்டை பகுதிக்கு அண்மையில் இன்று (12) அதிகாலை 1.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காருக்கு முன்னால் மரைக்கூட்டம் குறுக்கறுத்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது இருப்பினும் காரில் பயணித்த மூவரும் தெய்வாதீனமாக உயிரிழப்போ காயங்களோ இன்றி தப்பியுள்ளனர் இருப்பினும் சொகுசுகார் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
குறித்த பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் கானப்படுகின்றமையினால் மக்கள் குறித்த வீதியில் நாளாந்தம் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.