;
Athirady Tamil News

ஹெரோயினுடன் ஒருவர் கைது..!!

0

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடில்பாம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (11) இரவு 8.30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 670 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ள பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை இன்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 12 =

*