;
Athirady Tamil News

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு..!! (படங்கள்)

0

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு மற்றும் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும்

புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. இதில் மாண்புமிகு வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது கரங்களினால் அடிக்கல்லினை நாட்டி வைத்தார். தொடர்ந்து கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், ஆலய பரிபாலனசபையினர், அடியார்கள் என தொடர்ந்து எம்பெருமானுக்காக அன்னதான மடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர் .

அதனை தொடர்ந்து ஆலய வரலாற்றினை கூறும் ஆலயத்தின் தோற்றமும் வளர்சியும் என்னும் நூலும் வெளியிட்டு வைக்கபட்டது .

வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்
ஆன்மீக நிகழ்வுகள்
ஆலயங்கள்
உற்சவங்கள்
விழாக்கள்
தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*