;
Athirady Tamil News

பிரித்தானியா ஓட்டுனர்கள் இதை செய்ய தவறினால் கடுமையான அபராதம்! வெளியான முக்கிய தகவல்..!!

0

பிரித்தானியாவில் ஓட்டுனர்களின் உரிமத்தில் அவர்களின் முகவரி சரியாக இல்லை எனில் அவர்களுக்கு 1000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருக்கும் ஓட்டுனர்கள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற நேர்ந்தால், அந்த இடத்தின் முகவரிகளை தங்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி பெயர்களில் மாற்றம் இருந்தாலும் உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அப்படி மாற்ற தவறினால் அவர்களுக்கு 1000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படுமாம்.

இதை அவர்கள் பிரித்தானியாவின் ஓட்டுனர் மற்றும் வாகனம் உரிமம் வழங்கும் நிறுவனத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு தொகையும் கேட்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஓட்டுனர் உரிமத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இருக்க வேண்டுமாம்.

அதாவது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புகைப்படம் மாற்றப்பட வேண்டுமாம். அப்படி புகைப்படம் மாற்றப்படவில்லை என்றாலும் 1,000 பவுண்ட் அபராதமாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eleven =

*