;
Athirady Tamil News

பேப்பாறைப்பிட்டி வீதிப் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆராய்வு..!!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த புனரமைப்புப் பணிகளை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் பேப்பாறைப்பிட்டி வீதியினை புனரமைத்துத் தருகின்ற போதும், குறித்த வீதி கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வீதியின் ஒரு பகுதி தற்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 1.8 மில்லியன் ரூபா செலவில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த வேலைகள் தொடர்பில் மக்களுக்குள் ஏற்பட்ட குழப்பநிலை மற்றும் வேலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் குறித்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்தே குறித்த பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் குறித்த வேலையை நேரடியாகப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − twelve =

*