;
Athirady Tamil News

அத்துமீறிய குடியிருப்புக்கள்: வடக்கு முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு..!!

0

வடக்கு மாகாணத்தின் கவனயீனத்தாலேயே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டதாக முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 124 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன் போது ஆழுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். மேற்படி தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்படவேண்டும் என நாங்கள் கேட்டுவந்தோம்.

அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும் என கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசியல் கட்சிக ளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக் கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாணசபையை அதற்குள் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் எடுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், வடமாகாணசபையையும் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இத் தீர்மானம் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மேற்படி செயலணியின் 1 ஆம், 2ஆம், 3 ஆம் கூட்டங்களுக்கு வடமாகாணசபைக்கு அழைப்பு கிடைக்கவில்லை. 4 ஆம் கூட்டத்திற்கு அழைப்பு கிடைத்த நிலையில் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் முதலமைச்சர் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றார். என மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கூறினார். அதன் பின்னர் செயலணியின் கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லையா? கிடைத்திருந்தால் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து இதற்கு ஜனாதிபதியினால் வடக்கின் மீள்குடியேற்றத்திற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான கூட்டம் கூட்டப்பட்டது என மாகாண சபை உறுப்பின்னர் அயூப் அஸ்மின் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதற்கமைய மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடாத்தி ஒரு மீள்குடியேற்ற பொறிமுறையை தயாரித்திருந்தார்.

அந்த செயலணி உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு முகம் அவ்வளவு சரியில்லை. இதற்கிடையில் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உருவாக்கிய மீள்குடியேற்ற பொறிறை தொடர்பில் வடமாகாணசபை கவனம் செலுதவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்திய அமைச்சர் றிஷாட் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்கினார் என மாகாண சபை உறுப்பின்னர் அயூப் அஸ்மின் கூறினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தின் மீள்குடியேற்ற பொறிமுறையினை ஜனாதிபதியே ஏற்றுக் கொண்டார் என மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + twenty =

*