;
Athirady Tamil News

வவுனியாவில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு காசோலைகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா தென்னை பயிர்ச் செய்கை சபையினரால் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தென்னைக்காணியில் பிற பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு பயணாளிகளுக்கு (12) வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இச் செயற்திட்டத்தை ஊக்குவிக்க காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்தியப்பணிப்பாளர் திரு. ரி. உதயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண பிராந்திய முகாமையாளர் மகாலிங்கம், வவுனியா மேற்பார்வை பொது சகாதாரப்பரிசோதகர் திரு. க. தியாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பயணாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை மணியம், நீர்ப்பாணசத்திட்டமாணியம், உரமாணியம், ஊடுபயிர்ச் செய்கை மாணியங்களுக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 2 =

*