;
Athirady Tamil News

கேணல் ரத்னப்பிரிய மீண்டும் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்..!!

0

கிளிநொச்சி சிவில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கேணல் ரத்னப்பிரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ரத்னப்பிரிய பந்து கடந்த வாரம் மீண்டும் இராணுவத்துக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் கண்ணீர் வடித்தபடி அவருக்கு பிரியாவிடை வைபவம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

கேணல் ரத்னப்பிரிய தனது தாய் ரெஜிமெண்ட் தலைமையகமான அம்பேபுஸ்ஸ ராணுவ முகாமில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த பின்னரும் அவரை மீண்டும் கிளிநொச்சிக்கு நியமித்துத் தருமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கேணல் ரத்னப்பிரிய மீண்டும் கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறியக் கிடைத்துள்ளது.

சிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ்மக்கள்.. காரணமென்ன? (முழுமையான விபரங்கள், படங்கள், வீடியோவுடன்)

விஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..!! (படங்கள்)

இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + fourteen =

*