;
Athirady Tamil News

மகளின் 13 வயது தோழியை .. நண்பனுடன் சேர்ந்து 3 மாதம் சீரழித்த கொடூரன்.. சென்னை அருகே பரபரப்பு..!! (வீடியோ)

0

நாடு எவ்வளவு சீர்கெட்டு நாறிப்போய் வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகள் மீதான பலாத்கார சீரழிவுகளின் எண்ணிக்கைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. தந்தைகள் என்ற போர்வையில் மனசாட்சியை அடகுவைத்து தரம்தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கேடுகெட்ட மிருகங்களின் சம்பவம் இது.

சென்னை பனையூரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பு தோழியின் வீடு, தான் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று விட்டு வருவாராம். இதுபோல் பலமுறை தோழியின் வீட்டுக்கு மாணவி சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பள்ளி சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பும்போது முகம் வெளிறி காணப்பட்டது. அத்துடன் அழுதவாறே வீட்டுக்குள் நுழைந்தாள். இதனை கண்ட பெற்றோர் ஒன்றும் புரியாமல் மகளிடம் என்ன, ஏதென்று விசாரித்தனர்.

பாலியல் வன்புணர்வு

அதற்கு மாணவியோ, வழக்கமாக வீட்டுக்கு சென்றுவரும் தோழியின் அப்பா, வீட்டில் விட்டுவிடுவதாக கூறி தன்னை ஆட்டோவில் கடத்தி சென்றுவிட்டதாகவும், பின்னர் ஒரு மறைவான இடத்தில் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார் என்றும் கதறி அழுதபடியே தெரிவித்தாள். மகள் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், உடனடியாக கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த தோழியின் அப்பா பெயர் மன்சூர் அலிகான். வயது 38 ஆகிறதாம்.

உறைந்து நின்ற போலீசார்

பெற்றோரின் புகாரினை வழக்காக பதிவு செய்த போலீசார் மன்சூர் அலிகானை உடனடியாக பிடித்து விசாரித்தனர். விசாரணையில், “என் மகளை தேடி அடிக்கடி இந்த சிறுமி வருவாள். வரும்போது நிறைய முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளேன். ஆனால் இவ்வாறு நான் செய்வதை மற்றொரு தோழியின் தந்தையும் எனது நண்பருமான ரகமதுல்லா 35, என்பவர் நேரில் பார்த்துவிட்டார். அதனால் அவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததை படம் பிடித்தேன். பின்னர் அந்த ஆபாச படத்தை எடுத்து வைத்துக் கொண்டு சிறுமியை மிரட்டி மிரட்டியே 3 மாத காலம் பாலியல் வன்புணர்வு செய்தோம்” என்றார். இதைக் கேட்டதும் விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீஸ்காரர்களே விக்கித்து உறைந்து நின்றனர். இதையடுத்து போக்சா சட்டத்தின் கீழ் தோழிகளின் தந்தைகளான ரகமதுல்லா, மன்சூர் அலிகான் ஆகியோரை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

விரைவு நீதிமன்றங்கள் தேவை

இதுபோன்ற பெண் பிள்ளைகள் மீதான பாலியல் தாக்குதல் நாள்தோறும் அதிகரித்து போவது அரசுக்கு அழகல்ல. பெண்களுக்கு ஆதரவாக பல ஆண்டுகாலம் போராடி பெற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசும், காவல்துறையும் அக்கறையற்று, அலட்சியப்படுத்தி வருவதையே சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவே, பெண்களை பாதிக்கின்ற பல வன்முறைகளுக்கு தண்டனைகள் அதிகரிக்க வேண்டும்.சிறைக்குள் சுதந்திரமாக சுற்றித்திரியும் தண்டனையோ, அல்லது எளிதாக வெளியில் வந்துவிடும் தண்டனையோ இதுபோன்ற காமவெறியே உயிர்மூச்சாக கொண்டு வாழுபவர்களுக்கு வழங்க கூடாது. கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களும் அமைக்க முன்வரவேண்டும்.

ஜனநாயகத்துக்கு கிடைத்த சாபம்

அதேபோல நிர்பயா, ஸ்வாதி போன்றோருக்கெல்லாம் பொங்கியெழுந்த பெண்ணிய போராளிகள், நாட்டில் எந்த சிறுமிகள், குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளானாலும் அத்தகைய அவலங்களையும் அராஜகத்தையும் தட்டிக்கேட்ட வீரிட்டெழவேண்டும். 13 வயதே நிரம்பிய அந்த சிறுமி 3 மாதங்களாக இந்த வெறியன்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டிருப்பாள்? உடல் ரீதியாகவும் மனரீதியாகவும், அவள் எந்த அளவுக்கு பாதிப்படைந்திருப்பாள்? என்பதை பெண்பிள்ளைகள் பெற்றவர்கள் உணர்ந்து தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பது கொடுப்பது அவசியமான ஒன்று. 13 வயது சிறுமியின் தாய் இன்னமும் கதறிக் கொண்டிருக்கிறாள், “என் பொண்ணுக்கு வந்த இந்த நிலைமை எந்த பொண்ணுக்கும் வந்துடக்கூடாது” என்று. நாம் வாழும் தெருவிலேயே… நம்ம பெண் குழந்தைகளை… நம்பி தனியா விட முடியாத அவலம் நிலவிவருவது நம் ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள சாபம் போலும்.

Leave A Reply

Your email address will not be published.

5 + fourteen =

*