;
Athirady Tamil News

போன் பவர் பேங்கால் நடந்த விபரீதம்! அதிர்ஷ்டவசமா உயிர் தப்பிய இளைஞரின் வீடியோ..!!

0

சீனாவில் இளைஞரியின் பையில் இருந்த பவர் பேங் திடீரென்று வெடித்துச் சிதறி பையில் தீ பற்றியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் Guangdong மாகாணத்தின் Guangzhou பகுதியில் இளைஞர் ஒருவர் தன சக பயணியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பையில் தீடீரென்று தீ பரவியது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் உடனடியாக பையை எடுத்து வெளியில் வீசினார். இந்த சம்பவத்தைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பையை எடுத்து வீசிய பின்பும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தால், அதை அணைந்து பார்த்த போது, பையின் உள்ளே இருந்த பவர் பேங்க் வெடித்து சிதறியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளார்

பவர் பேங்க் என்பது மொபைல் போனிற்கு சார்ஜ் போடுவதற்கு பயன்படும் மின்சாதனம் ஆகும். முதலில் போன் தான் வெடித்துக் கொண்டிருந்தது, தற்போது பவர் பேங்கும் வெடிப்பதால் இது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − five =

*