;
Athirady Tamil News

பேரளிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் உருக்கம்..!!

0

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாகக் வேண்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன

இது குறித்து தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் கேட்டதற்கு,

பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்யுங்கள். தினம் தினம் துடிப்பதை விட இந்திய அரசே கருணை கொலை செய்து விடலாம்; என்று உருக்கமாகக் கூறினார்.

இந்த விடயத்தில் இந்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் இப்போது வருவது ஏன்? என்று புரியவில்லை.

எங்களை குடும்பத்துடன் கருணை கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம்; என்று கலங்கிய கண்களோடு கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 4 =

*