;
Athirady Tamil News

ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924..!!

0

ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் “இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்” (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம். இந்த நிறுவனம் கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது. டிசம்பர் 2011-ம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் 1911-ம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது. அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி, இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924-ம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.

இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012-ம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது. 2012-ம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31-வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது. அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது.

1வது தலைவர்களுக்கான நிறுவனம் (பார்ச்சூன் இதழ்) 1வது உலக அளவில் பசுமை(சுற்றுசூழல் மாசுபாடுகளை குறைந்த அளவில் வெளியிடுதல்)நிறுவனம் (நியூஸ் வீக்) 2வது உலக அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் (இன்டர்பிராண்ட்) 2வது மிகப்பெரிய மதிப்பு மிக்க நிறுவனம் (போரோன்) 5வது ரசிக்கப்பட்ட நிறுவனம்(பார்ச்சூன் இதழ்) 18வது புதுமையான நிறுவனம் (பாஸ்ட் கம்பெனி)

ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள் பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார். * 1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார். * 1808 – ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான். * 1836 – ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25-வது மாநிலமானது. * 1844 – இறந்தவர்களை பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது. * 1846 – இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது. * 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது. * 1904 – நியூயார்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.

* 1911 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1938 – பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார். * 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர். * 1954 – ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது. * 1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. * 1996 – ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது. * 2007 – உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள ரெயில் சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + six =

*