;
Athirady Tamil News

4 ஆண்டுகளில் 19 நாட்களே பாராளுமன்றம் வந்த பிரதமர் மோடி..!!

0

பிரதமர் மோடி தனது 4 ஆண்டு பதவி காலத்தில் வெளிநாடு பயணம் செல்வதற்குதான் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மேல்-சபை எம்.பி. சஞ்சய்சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வருவதை விட வெளிநாடுகளுக்குத்தான் அதிக நாட்கள் பயணம் செய்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய்சிங் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி தனது 4 ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். பலமுறை பாராளுமன்றம் கூடி இருக்கிறது.

ஆனால் பிரதமர் மோடி மொத்தம் 19 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்து இருக்கிறார். அதிலும் வருடத்துக்கு 4 நாட்கள் என்ற அளவில்தான் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறார். முக்கியமான நாட்களில் அவர் பாராளுமன்றத்துக்கு வரவேயில்லை.

பாராளுமன்றத்துக்கு வந்த நாட்களிலும், பெரும்பாலான நேரங்களில் பிரதமர் மோடி பேசாமலேயே இருந்திருக்கிறார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். இரண்டு முறை முன்னாள் பிரதமர் நேரு குறித்து குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். புதிய மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி பற்றியும், இரண்டு தடவை பாகிஸ்தான் குறித்தும் பேசி இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் இதையும் தாண்டி அவர் பாராளுமன்ற விவாதங்களில் 4 முறைதான் பங்கேற்று உள்ளார்.

பிரதமர் மோடி இந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்ததைவிட அதிகமாக தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். மொத்தம் 800 இடங்களில் அவர் பிரசாரம் செய்து இருக்கிறார். எல்லா வாரமும் வானொலி மூலம் பேசி இருக்கிறார். ஒரு முறை பணமதிப்பு இழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார்.

ஆனால் மக்கள் பிரச்சனை எதைப் பற்றியும் அவர் பேசவே இல்லை. மக்களுடைய முக்கியமான பிரச்சனைகளான விலை வாசி உயர்வு, ஜி.எஸ்.டி., மதவெறி பிரச்சனை, சாதியப் படுகொலை, வங்கி மோசடி போன்றவை குறித்து பேசவில்லை.

பாராளுமன்றம் நடக்கும் போது பிரதமர் மோடி பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் இருந்துள்ளார். பாராளுமன்றத்தை விட வெளிநாடுகளில்தான் அதிக நாட்கள் இருந்து இருக்கிறார்.

இவ்வாறு அந்த மனுவில் சஞ்சய்சிங் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி கூறிய அவர், “பாராளுமன்றத்துக்கு 19 முறை மட்டுமே வந்துள்ள பிரதமர் கடந்த 4 ஆண்டுகளில் 77 வெளிநாட்டு பயணங்களை முடித்து இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசாத அவர் கேள்வி கேட்காத இடங்களில் மட்டும் பேசி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 3 =

*