;
Athirady Tamil News

சென்னையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு..!! (படங்கள்)

0

சென்னையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பன்னாட்டு வழக்கறிஞரகள் மாநாடு
ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையமும் ஒன்றிணைந்து முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் 9 யூன் சனிக்கிழமை சென்னையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மாநாட்டின் முதன்மை நிகழ்வாக தமிழ் மக்களின் உரிமைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த காரணத் திற்காக இலங்கை பேரினவாத அரசால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டமேதை மாமனிதர் குமார் பொன்னம்பலம் மற்றும் மாமனிதர் வழக்கறிஞர் ரவிராஐ; ஆகியோருக்கு நீதிபதிகள் மற்றும் பேச்சாளர்கள் அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்புரையை சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் பார்வேந்தன் நிகழ்த்தினார்.
மாநாட்டில் ஒய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்; மாண்புமிகு நீதிபதி அரிபரந்தாமன் மாண்புமிகு நீதிபதி சிவசுப்பிரமணியம்மாண்புமிகு நீதிபதி ராஜன் மாண்புமிகு நீதிபதி இராசமாணிக்கம் மாண்புமிகு நீதிபதி அக்பர்அலி ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் வெங்கட் ராமன் மற்றும் அருணபாரதி தோழர் தியாகு இளம் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித் தனர்.

மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான தொல்.திருமாவளவன் இலங்கையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுகாஸ் மலேசியா நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் மகா ராமகிருஸ்ணன் பிரித்தானியா நாட்டிலிருந்து வழக்கறிஞர் பரமலிங்கம் கர்நாடகா மாநிலத்திலிருந்து மூத்த வழக்கறிஞர் ஜெயராய; டெல்லி உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காலின் கொன்ஸால்வேஸ் மக்கள் சிவிலுருமைக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஸ் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாரிவேந்தன் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமலை ராஐன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஸ்ணகுமார் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாலு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் பானுமதி மக்கள் அரசு கட்சி தலைவர் வழக்கறிஞர் ரஐனிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களே தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறுவதற்கு பிரதான காரணம் என்ற தலைப்பிலே அவுஸ்ரேலியா நாட்டிலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் ரெபேக்கா அவர்களும் தாயகத்திலே தீவிரம் அடைந்துவரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் முல்லைத்தீவு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மனித உரிமை ஆர்வலர் சந்திரலீலாவும் காணாமல்போனோர் குடும்பங்களின் தற்போதைய நிலை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் தேவராசா அவர்களும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மத்தியில் சாட்சியாளர்களாக பங்கேற்று தாயகத்தின் நிலமைகளை விரிவாகவும் ஆதாரத்துடனும் எடுத்துரைத்தார்கள். இறுதி யுத்தம் முடிந்த பின்னர் தேவராசா அவர்கள் தனது மகனை இராணுவத்திடம் கையளித்த தனது அனுபவத்தை கண்ணீர் மல்க எடுத்துக் கூறினார்.

மாநாட்டிற்கு சனல்-4 ஊடகவியலாளர் கலம் மக்ரே மற்றும் பிரித்தானியா மனித உரிமை செயற்பாட்டாளர் ஐனனி ஆகியோர் வழங்கிய உரைகள் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக கலந்து சிறப்பித்த சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்பு பேச்சாளர்கள் அனைவருக்கும் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் சார்பில் விசேட நினைவு சின்னம் வழங்கி மதிப்ப ளிக்கப்பட்டது.
இறுதியாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் இயக்கங்களின் வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பினார்கள் இதனால் அரங்கமே அதிர்ந்தது
சிறப்பு நிகழ்வாக தமிழீழ புரட்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா குழுவினரின் கச்சேரி இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*