;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜனின் மக்கள் சந்திப்பு..!! (படங்கள்)

0

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று (15) கிளிநொ்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுப்பட்டார்

இந்த மக்கள் சந்திப்பு திருவையாறு பகுதியின் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
விவசாய செய்கைகள் மேற்கொள்ளும்போது இங்குள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடலில் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது, அவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் எனத தெரிவித்தார்

அத்தோடு விவசாய போதனாசிரியர்களிற்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக காணப்படுகின்றது. குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு தென்னிலங்கையில் இருந்து பலர் நியமிக்கப்பட்டனர். குறித்த செயற்பாட்டிற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுத்திருந்தோம்.

இதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்படாமேலே காணப்படுகின்றது. குறித்த வெற்றிடம் காரணமாக மாவட்டத்தின் விவசாயம் பாதிக்கும் என்பது உண்மை. குறித்த விடயம் தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளுன். அதன் பிரகாரம் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 10 =

*