;
Athirady Tamil News

நீர்கொழும்பு கடலில் காணமற்போன இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..!!

0

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, ஏத்துகால கடலில் நீராட சென்று காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொரதொட்ட கடற்பரப்பில் இன்று (16) அதிகாலை குறித்த மாணவரினது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளான்.

கடலுக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்களுள் இரண்டு மாணவர்கள் நேற்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணமற்போன மற்ற மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*