;
Athirady Tamil News

வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!! (வீடியோ)

0

கோவை மாவட்டம் வால்பாறையில், சிறுத்தை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காஞ்சமலை தேயிலை தோட்டம் பகுதியில், கைலாசவதி என்ற பெண் நேற்றிரவு வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது, தேயிலை செடிகளில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென அவரைத் தாக்கியது. இதில், படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சிறுத்தை தாக்கி பெண் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*