;
Athirady Tamil News

உள்நாட்டு பயணத்துக்கு லக்கேஜ் கட்டுப்பாடு விதித்தது ஜெட் ஏர்வேஸ்..!! (வீடியோ)

0

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் ஒருவர், 15 கிலோ வரை கொண்ட ஒரு பேக்கை மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பயணிகள் கொண்டு வரும் பைகளின் எண்ணிக்கையை எந்த நிறுவனமும் இதற்கு முன் குறைத்ததில்லை.

முதன்முறையாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டிராவல் ஏஜெண்டுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், நேற்று முதல் உடமைகளின் எண்ணிக்கையை ஒன்றாகக் குறைத்திருப்பதாகவும், அது 15 கிலோ அல்லது அதற்குக் குறைவாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜூன் 15-க்கும் முன் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும், பிரீமியம் கார்ட் வாடிக்கையாளர்கள் தலா 15 கிலோ கொண்ட இரண்டு பேக்கேஜ்கள் வரை எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் உடன் வைத்துக் கொள்ளும் கைப்பைக்கு ஏற்கெனவே அதிகபட்சம் 7 கிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*