;
Athirady Tamil News

நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்..!! (வீடியோ)

0

டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

நாட்டின் அடுத்த ஐந்தாண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் பங்களிப்புடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும்.

நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது கூட்டம், அதன் தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடக்கிறது. அனைத்து மாநில முதலமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, ஆயுஷ்மான் பாரத், தேசிய சத்துணவு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து, நாளை மாலை அவர் பிரதமரை சந்திக்க இருப்பதாகவும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*