;
Athirady Tamil News

தர்மமுழக்கம் கிறிக்கெட் போட்டியில் தர்மபுரம் மத்தியகல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது..!! (படங்கள்)

0

நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த தர்மமுழக்கம் என அழைக்கப்படும் தர்மபுரம் மத்தியகல்லூரி மற்றும் முழங்காவில் மகாவித்தியாலய அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் கிறிக்கட் சுற்றுப்புாட்டியில் தர்மபுரம் மத்தியகல்லூரி அணி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்மபுரம் மத்தியகல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகாவித்தியாலய அணி 38.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தமது முதலாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம் மத்தியகல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 28.4 ஓவர்களில் 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த முழங்காவில் மகாவித்தியாலய அணி 5 விக்கட்டுகளை இழந்து 32 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான இன்று தொடர்ந்த முழங்காவில் மகாவித்தியாலய அணி 56 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. நிதர்சன் 41 ஓட்டங்களையும், டினோயன் 27 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

85 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம் மத்தியகல்லரி அணி 2 விக்கட்டுகளை இழந்து 8 விக்கட்டுகளால் முழங்காவில் மகாவித்தியாலய அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − five =

*