;
Athirady Tamil News

நாடு முழுவதும் 22,492 டெங்கு நோயாளர்கள்..!!

0

நாடு முழுவதும் இந்த வருடம் தொடக்கம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 492 டெங்கு நோயாளர்கள இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஜனவரியில், 7 ஆயிரத்து 178 பேரும், பெப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து 390 பேரும், .மார்ச் மாதத்தில் 3 ஆயிரத்து 325 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் டெங்கு நோய்த் தாக்கம் வெகுவாகக் குறைந்ததாக இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − thirteen =

*