;
Athirady Tamil News

மக்களின் இந்த நிலைமைக்கு காரணம் தமிழ் தலைமைகளே! டக்ளஸ் குற்றச்சாட்டு..!!

0

தமிழ் மக்களின் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் அரசாங்கம் இல்லை என தெரிவித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கு முழு பொறுப்பும் தமிழ் தலைமைகளைத் தான் சாரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வடமாகாணத்தில் பாலும் தேனும் ஓடும். எனவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வாய்ப்புத் தருமாறு டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

30 வருடத்தில் மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம்.

மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்றவர்கள் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதிகாரத்தினைப் பயன்டுத்த முடியாது என கூறியவர்களே இவ்வாறு அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு இருக்கையில், இம்முறை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வாய்ப்பினைத் தந்து பாருங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், வடமாகாணத்தில் பாலும் தேனும் ஓடும். எனவே, எமக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் சரிவர பயன்படுத்திக் காட்டுவோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + ten =

*