;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இராணுவம் விட்டுச்சென்ற காணியில் வெடி பொருட்கள்..!!

0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணியில் உள்ள கிணற்றிலிருந்து வெடி பொருட்டகள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்ட துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்ட போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெடி மருந்துகள் மீட்கப்பட்டது. மிகவும் ஆழமான குறித்த கிணற்றில் இருநாட்களாக பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசம் விடுதலை புலிகளின் முக்கய பிரதேசமாக பேசப்பட்டு வந்ததுடன், நீண்டகாலமாக படையினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் மக்கள் போராட்டம் மேற்கொண்டதை அடுத்து படிப்படியாக குறித்த பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் துப்பரவு பனி மேற்கொள்ளப்பட்ட போது கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் அடைக்கப்பட்ட பெட்டிகள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 19 =

*