;
Athirady Tamil News

கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

தனது 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மானிப்பாய், கட்டுடை சனசமூக நிலையத்துக்கு ரூ.50,000/= பெறுமதியான ஒலிபெருக்கிக்கருவிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார்.

இன்று 16.06.2018 மாலை 03 மணியளவில் கட்டுடை சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் சனசமூக நிலைய நிர்வாகிகளிடம் கையளித்தார்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் சனசமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*