புஸ்ஸல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு..!! (படங்கள்)
புஸ்ஸல்லாவ – வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய துவான் தில்கான் என்ற இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் இன்று காலை தனது 2 சகோதரர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் இளைய சகோதர்கள் இருவரும் வீடு திரும்பிய நிலையில், குறித்த இளைஞன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத காரணத்தினால் உறவினர்கள் தேடிய போது இளைஞன் சடலமாக ஆற்றில் கிடப்பதை கண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.