;
Athirady Tamil News

தலைக்கவசத்தில் பொருத்தும் குளிரூட்டியைத் தயாரிக்க பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் திட்டம்..!!

0

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்காகத் தலைக்கவசத்தில் பொருத்தும் குளிரூட்டியைத் தயாரிக்க பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆப்ட்எனர் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம் தன்னுடைய தயாரிப்புக்கு புளூஸ்னாப் எனப் பெயரிட்டுள்ளது. தலைப்பகுதி முழுவதையும் காக்கும் வகையிலான கவசத்தில் தாடைக்கு முன் பகுதியில் பொருத்தும் வகையில் இதை வடிவமைத்துள்ளது.

இந்தக் கருவி பேட்டரியின் உதவியுடன் நீரை ஆவியாக்கி உட்பகுதியில் குளிர்ச்சி நிலவச் செய்யும். ஒருமுறை பேட்டரியை மின்னூட்டம் செய்தால் பத்துமணி நேரம் வரை தொடர்ந்து இயக்கலாம்.

இந்தத் தயாரிப்பை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 9 =

*