;
Athirady Tamil News

பிக்பாஸ் 2: தெறிக்கவிட்ட முதல் சீசன்… ஒரு குறும்படம் பார்க்கலாமா…?..!! (வீடியோ)

0

பிக்பாஸ் சீசன் 2 இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கடந்த சீசனில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் மற்றும் அதிகம் பேசப்பட்ட வார்த்தைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக அதன் சீசன் 2 இன்று இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சீசனில் நடந்த சில சுவாரஸ்யமான, சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பற்றி சின்ன பிளாஷ் பேக்.. அதாவது கமல் பாஷையில் சொல்வதென்றால், ஒரு ‘குறும்படம்’ பார்க்கலாமா..

ஓவியா ஆர்மி:
தன் இயல்பான நடவடிக்கைகளால் பிக்பாஸ் வீட்டிற்குள் எதிர்ப்பை சந்தித்த ஓவியா, தனிமைப் படுத்தப்பட்டார். அங்கு தனிமையில் தவித்த ஓவியாவிற்கு ஆதரவாக வெளியில் ஓவியா ஆர்மியை உருவாக்கினார்கள் அவரது ரசிகர்கள். இன்றளவும் ஓவியா ஆர்மி செயல்பட்டு வருகிறது. வாராவாரம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எலிமினேஷனில் இருந்து தப்பினார் ஓவியா. அவருக்கு வாக்களிக்கும்படி ஹோட்டல் பில்லில் இருந்து, கிரிக்கெட் மைதானம் வரை இலவச விளம்பரம் நடந்தது.

மருத்துவ முத்தம்:
வீட்டிற்குள் நுழைந்தது முதலே ஆரவ்வைக் காதலிப்பதாகச் சொன்னார் ஓவியா. ஆனால், தன் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக அவரிடம் பேசாத ஆரவ், யாருக்கும் தெரியாமல் அவருக்கு முத்தம் கொடுத்தார். முத்தங்களுக்கு பேர் போன கமல், அதற்கு மருத்துவ முத்தம் எனப் பெயரிட்டு இன்னும் பிரபலமாக்கினார்.

குறும்படம்:
வாராவாரம் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பார்வையாளர்கள் மத்தியில் பேசிய கமல், அவ்வப்போது குறும்படம் போட்டுக் காட்டினார். ஒன்று குற்றங்களை நிரூபிக்க, அல்லது வீட்டை விட்டு வெளியேறுபவரின் பங்களிப்பு போன்றவையாகவே இந்த குறும்படங்கள் இருந்தன. ஒரு 5 வினாடி குறும்படத்திற்காக ஜூலி போராடியது தனிக்கதை.

பாட்டுக்கு பாட்டு:
ஓரம்கட்டப்பட்ட ஓவியாவை வெறுப்பேற்றும் விதமாக காயத்ரி, நமீதா மற்றும் ஜூலி சேர்ந்து சத்தமாக பாட்டுக்குப் பாட்டு பாடினர். இதனால் தூக்கத்தை இழந்த ஓவியா, ஆண்கள் பகுதிக்குச் சென்று அங்கு சினேகன் அருகில் படுத்துத் தூங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஓவியாவின் தற்கொலை முயற்சி:
வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ஓவியா, அடுத்தடுத்து பரபரப்பான வேலைகள் செய்தார். இரவுகளில் தூங்காமல் உலாவினார், மழையில் படுத்துத் தூங்கினார், பின்னர் அதிரடியாக நீச்சல் குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.

காயத்ரியின் பேட்வேர்ட்:
ஆக்சன் மூலம் காட்டியபோதும் கெட்ட வார்த்தைப் பேசியதற்காக கண்டிக்கப்பட்டார் காயத்ரி. சாக்லேட் பவுடர் பிரச்சினையிலும் அவர் மொழிப் பிரச்சினையால் மாற்றிப் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பரணி:
பல்வேறு காரணங்களால் ஆரம்பம் முதலே தனிமைப்படுத்தப்பட்டார் பரணி. கஞ்சா கருப்பிற்கும், இவருக்கும் நடந்த சண்டை சினிமாவை விஞ்சியது. ஆரம்பத்தில் பரணிக்கு ஆதரவாக இருந்த ஜூலி, பின் அதிரடியாக அவரது எதிரணிக்கு தாவினார். தீவிர மன அழுத்தத்தில் இருந்த பரணி, சுவர் ஏறிக் குதித்தாவது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். பரணியில் பெயருக்கு களங்கம் விளைவிப்பதுபோல் அந்த வீட்டில் இருந்த சிலர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அவை கடைசி வரை குறும்படம் மூலமாகக்கூட நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷட் அப் பண்ணுங்க:
பிக்பாஸ் வீட்டில் ஓவியா பேசிய பல வார்த்தைகள் டிரெண்டிங் ஆனது. அதில் ஒன்று தான் நீங்க ஷட் அப் பண்ணுங்க, ஸ்பிரே அடிச்சுப் புடுவேன் பார்த்துக்கோ போன்ற ஓவியாவின் டயலாக்குகள் வைரலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + nine =

*