;
Athirady Tamil News

வட்டுக்கோட்டை ஆசிரியர் வல்லுறவு புரியவில்லை பாலியல் தொல்லைகளே கொடுத்தாராம் மருத்துவ அறிக்கை..!!

0

வட்டுக்கோட்டை ஆசிரியர், தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளை வன்புணர்வுக்குட்படுத்தவில்லை, பாலியல் ரீதியான தொல்லைகளையே வழங்கினார் என்ற ரீதியில் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அது பாரதூரமான குற்றச்சாட்டு இல்லை என்ற கருத்து தற்போது சட்டத்துறை சார்ந்தவர்களாலும் ஆசிரியர் சார்ந்த தரப்புகளாலும் புதிய கதை ஒன்று பரப்பப்பட்டுள்ளது.

கல்வி பயிலவரும் மாணவியை – சிறுமியை நல்லொழுக்கத்துடன் வளர்த்தெடுப்பதே ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அதனை நம்பியே ஒவ்வொரு பிள்ளையையும் அவர்களது பெற்றோர் கல்வி பயில அனுப்புகின்றனர்.

நூற்றுக்கு 95 சதவீத ஆசிரியர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகம் மாணவர்களுக்கு போதனைகளை சொல்பவர்களாகவுமே சேவையாற்றுகின்றனர்.

அவர்களின் கடமையை நாம் போற்றவேண்டும். மீதமுள்ள 5 சதவீத ஆசிரியர்களை நாம் இனங்கண்டு அந்தப் பணியிலிருந்து அகற்றவேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் உண்டு.

இலங்கை குற்றவியல் சட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை அவரது விருப்பத்துடனோ விரும்பமில்லாமலோ எந்தவொரு நபரும் தனது பாலியல் அவாவை நிறைவேற்ற முடியாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வன்புணர்வு என்ற குற்றச்சாட்டுக்குள் அது அடங்கும்.

எனினும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் அல்லது முயற்சி குற்றவியல் சட்டத்தில் இடம்பிடிக்கைவில்லை என்றே குறிப்பிடலாம்.

அதற்காக அவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடுவோரை காப்பாற்றும் வகையில் அல்லது அதனை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக ஆசிரியர்கள் இந்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை நம்பிக்கையுடனேயே பாடசாலைக்கோ, தனியார் கல்வி நிலையத்துக்கோ அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஆசிரியர்கள் காப்பாற்றவேண்டும்.

வட்டுக்கோட்டை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) வட்டுகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தனியார் கல்வி நிலையத்தில் அவரிடம் கல்வி கற்ற மூன்று மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாணவிகளும் மருத்துவ சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணைகள் இடம்பெறுவதால் ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் வன்புணர்வுக்கு மட்டுமே சாட்டுதல்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்துறை சார்ந்தோரும் ஆசிரியர் தரப்புகளும் கூறுகின்றனர். அவர்களின் நோக்கம் ஆசிரியரை விடுவிப்பதேயாகும்.

அந்த ஆசிரியர் பிரபல பாடசாலை ஒன்றிலும் பணியாற்றுகிறார். இந்த ஆசிரியரின் நடத்தை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கம் அண்மைக்காலமாக எடுத்துக் கூறிவந்தது. பாடசாலையின் நிறைவேற்றுச் சபைக்கும் இந்த விடயம் கவனத்துக் கொண்டுவரப்பட்டது.

எனினும் ஆசிரியர் சார்பு தரப்புக்கள் இந்த விடயத்தில் தலையிட்டு, அவரைக் காப்பாற்றி வந்தன. ஆசிரியரைக் கைது செய்யப்போவதாக பாடசாலை அதிபருக்கு பொலிஸார் அறிவித்தல் வழங்கி பின்னரே, அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சாட்டுதல்களிலிருந்து விடுவிக்கப்படும் வரையே ஆசிரியர் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். எனவே அவர் பாடசாலையில் மீளவும் இணைக்கப்படுவார் என்பது உறுதி என எடுத்துக்கொள்ளலாம்.

மாணவிகள் வழங்கிய வாக்குமூலங்களை பார்த்தால், ஆசிரியர் எவ்வளவு மனநிலையில் நடந்துள்ளார் என்பது புலப்படும்.

வெற்றிலை மென்ற துப்பலை தன் மீது துப்பினார் எனவும் அந்த அருவருப்பான செயலால் அவரை தள்ளிவிட்டதாகவும் ஒரு மாணவி வாக்குமூலமளித்துள்ளார் என அறியமுடிகின்றது.

தான் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெற்றோரிடமோ வேறு எவரிமோ கூறக்கூடாது. கூறினால் அனைவரையும் வீடு புகுந்து கொல்லுவேன் என மிரட்டினார் என்று மற்றொரு மாணவி பீதியுடன் வாக்குமூலமளித்துள்ளார்.

எனவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உளவள ஆலோசனைக்கு உள்படுத்தப்படுவது கட்டாயமானதாகும். அதற்கு நீதிமன்று உத்தரவிடவேண்டும்.

ஆசிரியர் மீளவும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுவாராயின், பாதிக்கப்பட்ட மாணவிகளும் அதே பாடசாலையில் கல்வி பயில்வதால், அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிபார்ப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*