;
Athirady Tamil News

கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் விக்னேஸ்வரன்?..!!

0

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் காய் நகர்த்தல்களை விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டின் இறுதிக்குள் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், அடுத்த தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள் வடமாகாண முதலமைச்சர், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதா என்பதை தெரிவிக்கவில்லை.

எனினும், அண்மைய நாட்களாக தனி கட்சி ஒன்றை அமைக்கும் வகையில் சில நகர்வுகளையும், வியூகங்களையும் விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் பிரிந்து செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இரா. சம்பந்தனுக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*