;
Athirady Tamil News

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடியான் திருக்கோவில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம்..!! (வீடியோ)

0

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு நாவலடியான் திருக்கோவில் ராஜகோபுரத்துக்கு வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். வேத ஆகம முறைப்படி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நாவலடியான் கோவில் புதிய ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரில் இருந்து கோவில் மீது மலர் தூவப்பட்டது.

ன்னதாக, நாவலடியான் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர், காளியம்மன், மாரியம்மன் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + sixteen =

*