;
Athirady Tamil News

வாரவிடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்..!! (வீடியோ)

0

வாரவிடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாகவும், வாரவிடுமுறை என்பதாலும், திற்பரப்பு அருவியில் நீராட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இதனால் சிறுவர் பூங்கா , நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது தேகம் தீண்டிய சாரல் மழையை ரசித்தவாறு, திற்பரப்பு அருவியில் ஏராளமானோர் நீராடினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*