;
Athirady Tamil News

ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் இன்று திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாரளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, டக்ளஸ்தேவாநந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான வி. ராயதுரை, மத்தியமாகாண சபை உறுப்பினர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டு ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சர்வமதத்தினர், பொது மக்கள்,கட்சியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*