;
Athirady Tamil News

எந்தவொரு பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லை – பிரபா கணேசன்..!!

0

எந்தவொரு பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லை என்று ஜனாதிபதி விசேட அபிவிருத்தழி பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இன்று வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட தலைமை காரியாலய திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

பல காலமாக கொழும்பு மாவட்டத்திலே மாகாணசபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், குறுகிய காலம் பிரதி அமைச்சராக இருந்து எனது பணியினை ஆற்றியிருந்தேன் அக்காலத்தில் வன்னியில் உள்ள பிரதேசங்களிற்கு விஜயம் செய்த போது இங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை பார்த்த போது என்றாவது ஒருநாள் இங்குள்ள மக்களிற்கான சேவையினை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன் அந்த நிலைப்பாடு தற்போது பலித்திருக்கின்றது. வன்னியில் உள்ள நான்கு மாவட்டத்திலேயும் மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையான முறையிலே சரி செய்வதற்காகதான் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்டத்திற்கான தலைமை காரியாலத்தினை இன்று வவுனியாவில் ஆரம்பித்திருக்கிறது.

வன்னி பிரதேசத்திலே அரசியல் ரீதியாக அடி வைத்திருப்பதை பார்த்து பலர் நாங்கள் இங்கு காரியாலயம் திறந்தது பிரதேச வாதத்தை தூண்டுவதற்காகவா, சகோதரவாதத்தை தூண்டுவதறகாகவா, ஜாதி வாதத்தைதூண்டுவதற்காகவா, அல்லது மதவாதத்தை தூண்டுவதற்காகவா என்று பல்வேறான விமர்சனங்களை கூறுகின்றார்கள்.

ஆனால் நாங்கள் ஒரு போதும் அப்படி இல்லை நாங்கள் வன்னி மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்திருப்பது வன்னி மாவட்டத்தில் இருக்கும் பொருளாதார ரீதியாக பின்தள்ளப்பட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டுதானே தவிர எந்த வித பிரதேசவாதத்தை செய்வதற்காக இங்கு வரவில்லை. இந்த வன்னி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னி மாவட்ட மக்கள், யாழ் மாவட்ட மக்கள், மலையக மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடையே எந்தவொரு பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்யும் நோக்கம் ஜனநாயக மக்கள் காங்கிரஸிற்கு இல்லை என்பதை தெட்டத்தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

வன்னிப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிற்கு வேலையில்லை, விவசாயிகளிற்கு சரியான முறையிலே நீர்ப்பாசன திட்டம் எதுவும் இல்லை, குடிநீர் பிரச்சனையுள்ளது மேலும் பாடசாலை பிள்ளைகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் பாடசாலை செல்வதற்கு பாரிய பிரச்சரனை இருக்கின்றது. இது பேன்ற பிரச்சனைகளை முழுமையான முறையில் தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை எடுப்பதுதான் எமது கட்சியின் முக்கிய வேலையாக இருக்கின்றது.
கடந்த காலத்திலே கொழும்பு மாவட்டத்தில் பல பாடசாலைகள் மோசமாக இருந்த போது 46 பாடசாலைகளை முழுமையாக அபிவிருத்தி செய்திருந்தோம். அதேநிலைமையை வன்னி மாவட்டத்தில் செய்வோம்.

மேலும் ஏனைய கட்சிகளிற்கு எதிராக நாம் இல்லை ஏனைய கட்சிகள் தங்களது வேலைகளை செய்து கொண்டு செல்லட்டும், இன்று இந்த நாட்டை பார்க்கும் போது கடந்த காலங்களில் இடம்பெற்ற எந்தவிதமான அபிவிருத்தியும் இப்பொழுது இடம்பெறுவது இல்லை. கடந்த காலங்களிலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பல விதங்களில் விமர்சனங்கள் செய்தாலும் கூட அந்த ஆட்சியிலே கிடைக்கப்பெற்ற அபிவிருத்திகள் இன்று இல்லாமல் போய்விட்டது. அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலும் இல்லாமல் போய்விட்டது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் யாழ் தேவி புகையிரதத்தை கொண்டு வந்தோம். அதனை கொண்டு வருவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெரும் பாடுபட்டவர். யாழ் வைத்தியசாலையை பாருங்கள் ஒரே மாடியில் ஆறு சத்திர சிகிச்சை கூடங்கள் இருக்கின்றன, இது கொழும்பில் கூட இல்லை இவ்வாறான பல அபிவிருத்திகளை கடந்த ஆட்சியின் போது செய்திருந்தோம். இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்தான் தமிழருக்கு பாரிய அழிவு ஏற்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.

1927ம் ஆண்டு 1983ம் ஆண்டு கலவரம், யாழ் நூலக எரிப்பு போன்றவைகளை செய்ததுடன் விடுதலைப்போராட்டத்திலும் பிரிவினையை ஏற்படுத்தி போராட்டத்தை மழுங்கடித்ததும் அவர்களாகதான் இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இருக்கிறோம். ஐக்கிய மக்கள் சுததந்திர கூட்டமைப்பில் நாங்கள் இருக்கின்றோம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலத்தில் ஏற்பட்ட அபிவிருத்திகளை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி பணிப்பாளராக நான் இருந்தாலும் கூட அது ஒரு அரசியல் ரீதியாக வழங்கப்ட்ட பதவி என்பதை மக்களிற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். ஏன்என்றால் அரசாங்கத்திடம் தங்கியே இருப்பதனால், மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிதியினை பெற்று பாரிய சேவையினை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையொன்று இருக்கின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது துரதிஸ்டவசமாக யுத்தத்தில் எம்மால் வெற்றிகொள்ள முடியாமல் போய்விட்டது. யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகியும் நாம் பழைய கதையை கதைப்பதை விடுத்து முழுமையான முறையிலே எமது மக்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அபிவிருத்தி மற்றும் உரிமையை ஒன்றாக எடுத்துச்செல்ல வேண்டும் அதைவிடுத்து எங்களிற்கு அபிவிருத்தி வேண்டாம் உரிமைதான் வேண்டும் என்று சென்றதால்தான் எங்களிற்கு எவ்வாதமான அபிவிருத்தியும் இல்லாமல் போய்யுள்ளது.

இந்த வன்னி மாவட்டத்திலே தேசிய கட்சியின் ஊடாக தமிழர் ஒருவர் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். கடந்த காலங்களிலே தமிழர் வாக்குகளின் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவம் தேசிய கட்சிலே வராத காரணத்தால்தான் தமிழர் ஒருவருக்கு அமைச்சு பதவியாவது பெற்றுக்கொண்டு இந்த பகுதியில் இருக்கின்ற மக்களிற்கான முழுமையான சேவையை செய்ய முடியவில்லை.

அதனை கட்டாயம் நாம் மாற்றியமைப்போம். அந்த மாற்றத்திற்கு இங்கு வருகைதந்திருக்கும் மக்கள் முழுமையான ஒத்தழைப்பை தர வேண்டும். இங்கு வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரகரா ஏனைய பெரும்பான்மை இன சிங்கள அரசியல்வாதி போல் அல்ல மாறாக தமிழ் மக்கள் சரியான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக உறுதுணையாக இருக்கிறார். பாராளுமன்றத்திலே பல இடங்களிலே தமிழ் மக்களிற்கு அநீதி இழைக்கப்படும் போது டிலான் பெரகரா குரல் கொடுத்திருக்கிறார். என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*