;
Athirady Tamil News

லண்டனில் டாக்டரிடம் கத்திமுனையில் கொள்ளை: வீடியோவை வெளியிட்டு விசாரணை..!!

0

லண்டனில் 46 வயது மருத்துவர் ஒருவர் வீட்டில் காரை நிறுத்தி விட்டு வெற்றிக்கு செல்லும் சமயம் மர்ம நபர்களால் கத்திமுனையில் தனது வாட்சை கழற்றி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமெராவின் மூலம் பதிவாகியிருந்தது.

பாதிக்கப்பட்ட நபர் இது பற்றி கூறுகையில் நான் வீட்டில் காரை பார்க் செய்து விட்டு போனில் ஏதோ தகவல் வரவே அதனை பார்த்து கொண்டிருந்தேன்.

திடீரென கார் அருகே ஒருவர் வந்து என்னை மிரட்டினார். எனது வாட்சை கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் என்னை கொன்று விடுவதாக கூறினார்

அதன் பின் இன்னொரு முகமூடி அணிந்த நபர் வந்து எனது மொபைலையும் பிடுங்கி கொண்டார். மேலும் எனது பர்ஸை கேட்டனர். அப்போது என்னை மிரட்டுவதாக காரின் மேல் மோசமாக தாக்கினர். ஆகவே அதனையும் நான் கொடுத்த பின் தப்பி சென்றனர்

நல்லவேளையாக தான் கட்டியிருந்தது போலி ரோலக்ஸ் வாட்ச் என்றும் அவர் கூறினார். லண்டனில் தற்போது இது மாதிரியான முகமூடி நபர்கள் தாக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் தான் கவனமாக போலி ரோலஸ் அணிந்திருந்தாகவும் இனிமேல் தான் வாட்ச் கட்ட போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த பொது அவரது மனைவியும் சில அடி தூரத்தில் வீட்டினுள் இருந்தபடி நடந்த கொடுமையை பார்த்து கொண்டிருந்தனர்.

இது பற்றிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. லண்டன் பொலிஸார் இவ்வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eight =

*