;
Athirady Tamil News

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் தமது வாகனத்தில் வைத்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.

லூசெர்ன் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலிய மாணவியை வாடகை டாக்ஸிக்குள் வைத்து பலாத்காரம் செய்த விவகாரத்தில் 45 வயது நபரை லூசெர்ன் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, குறித்த 18 வயது மாணவி மது போதையில் இருந்ததாகவும், உணர்வுகளை தூண்டும்படி அவர் நடந்து கொண்டதாகவும் குறித்த டாக்ஸி ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

தமது குடியிருப்புக்கு செல்ல குறித்த டாக்ஸியில் ஏறிய அவரை, அந்த ஓட்டுனர் அருகாமையில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று, காரின் பின்னிருக்கையில் வைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.உதவி கேட்டு கூச்சலிட்ட மாணவியை தாக்கி கொலை செய்து விடுவதாகவும் அந்த டாக்ஸி ஓடுனர் மிரட்டியுள்ளார்.

20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த ஓட்டுனரின் பிடியில் இருந்து தப்பிய மாணவி உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த டாக்ஸி ஓட்டுனர் 2010 முதல் 2016 வரையான காலகட்டத்தில் 5 பெண்களை இதேபோன்று பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

மட்டுமின்றி தமக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை உணர்ந்தே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களில் எவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + six =

*