;
Athirady Tamil News

எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981..!!

0

கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1767 – பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 – 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.

* 1815 – வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான். * 1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.

* 1908 – ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர். * 1923 – எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர். * 1948 – மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. * 1953 – எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது. * 1953 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர். * 1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. * 1979 – சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

* 1981 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். * 1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. * 1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார். * 1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

* 2001 – நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. * 2004 – ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. * 2006 – கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 7 =

*