;
Athirady Tamil News

போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டமையால் வவுனியா நகரசபைக்கு வருமான இழப்பு..!!

0

வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றுவரும் கார்னிவெல் நிகழ்வில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டமையால் வவுனியா நகரசபைக்கு வருமான இழப்பு ஏற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா

வவுனியா வைரவபுளியங்குளம் நகரசபை சிறுவர் மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக சிறுவர்களிற்கான களியாட்ட நிகழ்வு (கார்னிவெல் நிகழ்வு) இடம்பெற்று வரும் நிலையில் இதன் 25 வீத வருமானம் நகரசபைக்கு வரியாக செலுத்தப்படவேண்டிய நிலை ஏற்பாட்டாளர்களுக்கு உள்ளது.

இந் நிலையில் இக் களியாட்ட நிகழ்வுக்கான அனுமதி பற்றுச்சீட்டுக்கள் நகரசபையின் முத்திரையிடப்பட்ட பின்னரே பார்வையாளர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

எனினும் நகரசபைக்கு அதிக வருமானம் கிடைத்ததை மறைப்பதற்காக போலியாக பற்றுச்சீட்டை அச்சிட்டு நகரசபையின் முத்திரை இடப்படாமல் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையினால் நகரசபைக்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்பாட்டாளர்களால் திருட்டுத்தனமாக போலி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை நலன்விரும்பியொருவரினால் நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் நகரசபை தலைவர் இ. கௌதமன், உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் கொண்ட குழு திடீரென களியாட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேரடியாக சென்று சோதனை நடத்தியதில் போலி பற்றுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை நகரசபை தலைவரிடம் இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,

நகரசபையிடம் அனுமதி பெறாமல் அனுமதி பற்றுச்சீட்டுக்கள் பார்வையாளாகளுக்கு வழங்கப்பட்டமை உண்மை. இது தொடர்பாக நாம் குறித்த இடத்தில் இருந்து போலியான பற்றுச்சீட்டுக்களை கைப்பற்றியுள்ளோம். இவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். தாம் எதிர்பார்த்ததையும் விட அதிகமாக பார்வையாளர்கள் கார்னிவெலுக்கு வந்தமையால் அவசரமான பற்றுச்சீட்டை அச்சிடவேண்டியேற்றபட்டதாகவும் சனி, ஞாயிறு தினங்களில் நகரசபை மூடப்பட்டுள்ளமையால் திங்கட்கிழமை நகரசபைக்கு தெரியப்படுத்தி குறித்த பணத்தை செலுத்த திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் நாம் பற்றுச்சீட்டை கைப்பற்றியுள்ளமையால் அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பற்றுச்சீட்டு இலக்கங்களும் ஒழுங்கில் இல்லாமையால் பரிய சிக்கல் நிலையும் உள்ளது. எத்தனை பற்றுச்சிட்டுக்கள் இவ்வாறு விற்பனையாகியுள்ளது என்பது தொடர்பில் நாம் பரிசீலித்து அதற்கான வரியை அறவிடுவோம் என தெரிவித்தார்.

எனவே பொது மக்களே நகரின் அபிவிருத்தியை நாம் எதிர்பார்த்திருக்கையில் இவ்வாறு தில்லு முள்ளு செய்யும் நபர்கள் தெர்டர்பில் அவதானமாக இருங்கள். உங்கள் பணம் எவரோ ஒருவர் சுரண்டி செல்ல அனுமதிக்காதீர்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*