;
Athirady Tamil News

4 ஆம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 334/8..!!

0

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் முடிவில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை விட 47 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இதை அடுத்து, இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேரா, உடவத்த ஆகியோர் களமிறங்கினர். பெரேரா 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கசுன் ராஜித களமிறங்கினார்.

இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்களும் எடுத்திருந்தது. உடவத்த 11 ஓட்டங்களுடனும், ராஜித ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து நேற்றும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக உடவத்த 19 ஓட்டங்களிலும், ரஜிதா டக்-அவுட்டு முறையிலும் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தனஞ்ஜெய டி சில்வா 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ், தினேஷ் சந்திமல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சந்திமல் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மெண்டிஸ் உடன் ரோஷன் சில்வா ஜோடி சேர்ந்து ஓட்டங்களை குவித்தார். அரைசதம் அடித்த மெண்டிஸ் 87 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரோஷன் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நிரோஷன் திக்வெல்ல 62 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 89 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 287 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அகில தனஞ்ஜெய 16 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 6 விக்கெட்டும், கெமார் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − three =

*