;
Athirady Tamil News

ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து..!!

0

ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் – கொழும்பு வீதியின், குயில்வத்தை பகுதியிலே இன்று (18) காலை 7.15 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டனில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற போது, சீரற்ற காலநிலையால் பாதையை விட்டு விலகி வேன் குடை சாய்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும், வேன் சாரதி படுகாயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*