;
Athirady Tamil News

டெல்லியில் பட்டப்பகலில் ரவுடி கும்பல் மோதல் – 3 பேர் பலி..!!

0

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி அருகே இன்று இரு கார்களில் சென்று கொண்டிருந்த பிரபல ரவுடிகள் கோகி மற்றும் டில்லு ஆகியோரின் கைக்கூலிகளுக்குள் சாந்த் நகர் பகுதியில் திடீர் மோதல் ஏற்பட்டது. கார்களை விட்டு கீழே இறங்கிய அடியாட்கள் ஒருவரையொருவர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த களேபரத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருதரப்பினருக்கிடையிலான இந்த மோதலில் அவ்வழியாக சென்ற ஒரு பெண் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரவுடிகள் வந்த ஒரு காரை ஷாலிமார் பாக் பகுதியில் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆள்கடத்தல் மற்றும் மாமூல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்பகை காரணமாக இன்றைய மோதல் நடைபெற்றதாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*