;
Athirady Tamil News

காதல் கணவருக்காக மேகன் மெர்க்கல் செய்யும் தியாகம்..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து உறுப்பினரான மேகன் மெரிக்கல் தமது மிகப் பிடித்தமான உணவு வகைகளையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு மாறியுள்ளார்.

இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து சட்ட திட்டங்களை மேகன் மெர்க்கல் துல்லியமாக கடைபிடித்து வருகிறார்.

பொதுவாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் உணவு விடயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருவது வழக்கம்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி அவரது உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதில்லை. மட்டுமின்றி அரச குடும்பத்து உணவு பட்டியலில் ஒருபோதும் கடல் உணவுகள் இடம்பெறுவதில்லை

காரணம் கடல் உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதுவதால் தான். மேலும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அரச குடும்பத்து உறுப்பினர்கள் கடல் உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் கடல் உணவுகளை மிகவும் விரும்பி உண்ணும் மேகன் மெர்க்கலுக்கு இந்த விடயம் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், அரச குடும்பத்து உறுப்பினராக மாறியுள்ளதால், தமது காதல் கணவருக்காக இதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

உணவு விடயத்தில் மட்டுமல்ல மேகன் மெர்க்கலுக்கு கட்டுப்பாடு. அவர் இனி எந்த தேர்தலிலும் வாக்களிக்க போவதில்லை.

செல்பி மற்றும் பொதுமக்களுக்கு கையொப்பம் இட்டுத்தருவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 9 =

*